நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்பு: சிறு வீடுகளுக்கு குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்படும்: முதல்வர் முதல் கையெழுத்திட்டார்.

சண்டீகர்:

பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். மேலும், சிறு வீடுகளுக்கு குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் உள்கட்சிப் பூசல் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து, மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மாநில முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மாநிலத்தின் முதல் தலித் முதல்வர் என்ற பெருமையை சரண்ஜீத் சிங் சன்னி பெற்றுள்ளார்.

சீக்கியரான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஓ.பி.சோனி ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

மாநில முதல்வராகப் பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில்,
நகர்ப்புறங்களில் 150 அல்லது 200 சதுர யார்டுகள் பரப்பளவில் அமைந்துள்ள சிறு வீடுகளுக்கு குடிநீர் விநியோகக் கட்டணம், கழிவுநீர்க் கட்டணம் ஆகியவை விதிக்கப்படாது.

மக்களுக்கு விதிக்கப்படும் மின்சாரக் கட்டணம் அதிகமாக உள்ளதாகப் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset