நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவில் இருந்து பயணிகள் வரலாம்: தடையை நீக்கியது மலேசியா

புத்ராஜெயா:

இந்திய துணை கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மலேசியா நீக்கி உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதையடுத்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இனி மலேசியாவுக்கு வர இயலும்.

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

Air India's first repatriation flight from Singapore lands in Delhi,  bookings to 12 countries open

இந்நிலையில், நிரந்தர குடியுரிமை தகுதி உள்ளவர்கள், நீண்ட கால தங்கும் அனுமதி உள்ளவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு மலேசியாவுக்குள் வர இனி தடை இல்லை என குடிநுழைவு தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐந்து நாடுகளின் தூதரகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

"மலேசியாவுக்கு வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். மலேசியாவுக்கு வந்தபிறகு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், குறிப்பிட்ட காலத்துக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமியின் உருமாறிய திரிபுகள் நாட்டுக்குள் ஊடுருவாமல் இருக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset