செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைதான ஆடவர் மரணம்
ஷாஆலம்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பிரச்சினையில் ஈடுபட்ட ஆடவர் மாண்டார்.
வெளிநாட்டைச் சேர்ந்த அவருக்கு வயது 30.
பிரிட்டனிலிருந்து புக்கெட்டுக்கு அவர் கோலாலம்பூர் வழியாகச் சென்றார்.
சென்ற சனிக்கிழமை அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்தபோது அவர் பிரச்சினைகளை ஏற்படுத்தி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் சிலாங்கூர் போலிஸ்படைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.
போலிஸ் அதிகாரிகள் இருவரையும் துணைக் காவல் அதிகாரி ஒருவரையும் காயப்படுத்திய பிறகு ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவ்ஆடவர் சுயநினைவை இழந்தார்.
விமான நிலையத்தின் மருத்துவக் குழு அவருக்கு உதவியளித்து. ஆயினும் பின்னர் அவர் மாண்டது உறுதிசெய்யப்பட்டது.
அவரது உடல் செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அங்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்.
அவர் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 26, 2024, 5:29 pm
இசை துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்: ஃபஹ்மி ஃபாட்சில்
November 26, 2024, 5:22 pm
கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்: டிரம்ப்
November 26, 2024, 5:13 pm
மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு: டிசம்பர் 21ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது: முனைவர் செல்வஜோதி தகவல்
November 26, 2024, 4:33 pm
தென் கொரியாவிற்கான அதிகாரப்பூர்வப் பயணம் 32.8 பில்லியனை முதலீட்டுக்கு வழி வகுத்துள்ளது: பிரதமர் அன்வார்
November 26, 2024, 3:41 pm
எஸ்பிஎம் தேர்வு காலக்கட்டத்தில் திரெங்கானுவில் 8 பள்ளிகள் வெள்ளதால் பாதிக்கப்படும்: ஜெலானி சுலோங்
November 26, 2024, 3:21 pm
ஒரிஜினல் பினாங்கு நாசிகண்டார் காயு அதிபர் ஹாஜி புர்ஹான் இங்கிலாந்தின் உயர் விருது பெற்றார்
November 26, 2024, 3:16 pm
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பள்ளிகளில் தேர்வுகளை ரத்து செய்யலாம்: ஃபட்லினா சிடேக்
November 26, 2024, 2:47 pm
பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர்.ஜலிஹா முஸ்தாஃபாவின் இளைய சகோதரி காலமானார்
November 26, 2024, 2:46 pm