செய்திகள் மலேசியா
Asia Talents Search-போட்டியின் இறுதிசுற்றுக்கு 4 வயது சிறுவன் விகாஷ் தேர்வு
கோலாலம்பூர்:
Asia Talents Search-போட்டியின் இறுதிசுற்றுக்கு 4 வயது சிறுவன் விகாஷ் தேர்வானார்.
தனி திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக அமைந்த இப்போட்டியின் இறுதி சுற்று டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரிக்ஃபில்ஸில் அமைந்துள்ள The Temple of Fine Arts மையத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கெடுக்கும் ஒவ்வொரும் தங்களிடமுள்ள தனி திறமைகளை 5 நிமிடங்களில் வெளிபடுத்த வேண்டும்.
அவ்வகையில் முதல் சுற்றில் விகாஷ், வாகனங்களின் சின்னங்களை வைத்து அவை எந்த நாட்டிற்கு சொந்தமானது என்று அடையாளம் கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அதனைத் தொடர்ந்து, மற்றொரு சுற்றில் இளம் ஆய்வாளராக தனது தனித் திறமையை விகாஷ் வெளிப்படுத்தில் இறுதி சுற்றில் தனக்கான இடத்தைப் பதிவு செய்தார்.
இறுதி சுற்றில் மொத்தம் 100 புள்ளிகள் வழங்கப்படும். 100 புள்ளிகளில், 60 புள்ளிகள் விகாஷின் சொந்த படைப்பைச் சார்ந்து அமையும். 20 புள்ளிகள் பொது மக்கள் வாக்கெடுப்பிலும் மற்றுமொரு 20 புள்ளிகள் இறுதி சுற்று அன்று நடைபெறும் பார்வையாளர்களின் வாக்கெடுப்பைச் சாரும்.
விகாஷ் சிறப்பாகச் செயல்பட அவரின் ஆசிரியை ரதிப்பிரியா முக்கியப் பங்காற்றியுள்ளார். அவர் இப்போட்டியில் விகாஷ் சிறப்பாகத் தனது படைப்புகளை வழங்க பயிற்சி அளித்துள்ளார்.
விகாஷ் இந்தப் போட்டியில் வெற்றி பெற பொதுமக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சமூக ஊடகத் தளங்களுக்குச் சென்று விருப்பக் குறியைத் தட்டி அவருக்கான வாக்கைச் செலுத்தலாம்.
வாக்கைச் செலுத்த:
1. Facebook: https://www.facebook.com/asiatalentssearch
2. Instagram: https://www.instagram.com/asiatalentssearch/?hl=en
முன்னதாக, கடந்தாண்டு நவம்பர் 9-ஆம் 3 வயது சிறுவன் விகாஷ் 1 நிமிடத்தில் தொடர்ச்சியாக 40 வாகனங்களின் சின்னத்தைக் கொண்டு அதன் பெயர்களைச் சரியாக அடையாளப்படுத்தி மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 26, 2024, 5:22 pm
கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்: டிரம்ப்
November 26, 2024, 5:13 pm
மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு: டிசம்பர் 21ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது: முனைவர் செல்வஜோதி தகவல்
November 26, 2024, 4:33 pm
தென் கொரியாவிற்கான அதிகாரப்பூர்வப் பயணம் 32.8 பில்லியனை முதலீட்டுக்கு வழி வகுத்துள்ளது: பிரதமர் அன்வார்
November 26, 2024, 3:41 pm
எஸ்பிஎம் தேர்வு காலக்கட்டத்தில் திரெங்கானுவில் 8 பள்ளிகள் வெள்ளதால் பாதிக்கப்படும்: ஜெலானி சுலோங்
November 26, 2024, 3:21 pm
ஒரிஜினல் பினாங்கு நாசிகண்டார் காயு அதிபர் ஹாஜி புர்ஹான் இங்கிலாந்தின் உயர் விருது பெற்றார்
November 26, 2024, 3:16 pm
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பள்ளிகளில் தேர்வுகளை ரத்து செய்யலாம்: ஃபட்லினா சிடேக்
November 26, 2024, 2:47 pm
பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர்.ஜலிஹா முஸ்தாஃபாவின் இளைய சகோதரி காலமானார்
November 26, 2024, 2:46 pm