நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரிஜினல் பினாங்கு நாசிகண்டார் காயு அதிபர் ஹாஜி புர்ஹான் இங்கிலாந்தின் உயர் விருது பெற்றார் 

லண்டன்:

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் Original Penang Kayu Nasi Kandar குழுமத்தின் நிறுவனரும் இயக்குனருமான ஹாஜி புர்ஹான் முஹம்மதுவுக்கு இங்கிலாந்தின் வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறையின் அமைச்சர் சர் ஸ்டீபன் டிம்ஸ்,  World Muslim Business Leader Excellence Award வழங்கி சிறப்பித்தார்.

யூனிவர்சிட்டி ஆப் லண்டன், உலக முஸ்லிம் தலைமைத்துவ மன்றம், (World Muslim Leadership Forum), ICOP, KSI ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த விருதுக்கு ஹாஜி புர்ஹான் முஹம்மது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டார் நிறுவனர் ஹாஜி புர்ஹான் கடந்து வந்த பாதை நெடியது. 

ஹாஜி புர்ஹானின் வர்த்தகப் பாதை 1970 களில் அவரது தந்தையிடமிருந்து தொடங்குகிறது. அவரது தந்தையார் தள்ளு வண்டியில் மீ கோரெங்கை விற்றபோது அருகிலிருந்து உணவுத் தொழிலை அவர் கற்கத் தொடங்கினார். ஒரு சிறுவனாக, புர்ஹான் தனது தந்தையுடன் கடுமையாக உழைத்தார். சமையல் கலையையும் கற்றுக்கொண்டார். 

பெட்டாலிங் ஜெயா என்ற SS2 இல் ஒரு சிறிய உணவுக் கடை துவங்கியது முதல் அவரது ஓய்வில்லாத உழைப்பினால் அவர் தனது தொழிலில் பெரிய முன்னேற்றம் கண்டார். 

ஹாஜி புர்ஹானின் எளிமை, அவர் அளித்த உணவின் அறுசுவை தரம், ஊழியர்களை அவர் நடத்தும் விதம் என்று அவர் படிப்படியாக முன்னேறினார். இந்த எளிமையான தொடக்கத்திலிருந்து, ஹாஜி புர்ஹான் மலேசியாவின் மிகவும் பிரபலமான நாசி கண்டார் பிராண்டுகளில் ஒன்றாக தம்மை அடையாளப்படுத்த அவர் அடித்தளம் அமைத்தார்.

இன்று, Original Penang Kayu Nasi Kandar அதன் அசல் சுவைக்காகவும் தரத்திற்காகவும் மலேசிய மக்களால் கொண்டாடப்படுகிறது. 

நாடு முழுவதும் 10 க்கும் மேற்பட்ட உணவகங்களுடன் இந்த Kayu Nasi Kandar பிராண்ட் பாரம்பரிய உணவு வகைகளில் சிறந்து விளங்குகிறது. 

நறுமண கறிகள், மிருதுவான வறுத்த கோழி, சுவையான பிரியாணி, மீன், இறால் வறுவல்கள், சீன, மலாய் பாரம்பரிய உணவுகள் மீண்டும் மீண்டும்  வாடிக்கையாளர்களை அவரது உணவகத்தின் பக்கம் ஈர்த்து வருகின்றது.  

பல மலேசியர்களுக்கு, அசல் பினாங்கு காயு நாசி கந்தர்கண்டார் ஒரு உணவகத்தை விட அதிகம் நெருக்கமானது மட்டுமல்ல ஏக்கத்தைத் தூண்டும் இடமாக அமைந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் நண்பர்கள் சீனப் புத்தாண்டின் போது SS2 அவுட்லெட்டில் கூடி டாஸ்ஸிங் யீ சாங் போன்ற பாரம்பரிய உன்வவுகளை தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளோடு சுவைப்பதை ஒவ்வோர் ஆண்டும் காண முடியும்.

எவ்வாறாயினும், ஹாஜி புர்ஹானின் வெற்றி சமையல் உலகிற்கு அப்பால் நெடியது. பல சமூக சேவைகளை இலைமறை காயாக செய்து வருகிறார். கல்வி நிலையங்களுக்கும் மார்க்க பள்ளிகளுக்கும் உதவி வருகிறார். அவரால் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். எதையும் விளம்பரம் இல்லாமல் செய்வதே தனக்கு விருப்பமானது என்று அடக்கமாக கூறுகிறார் ஹாஜி புர்ஹான்.

ஹாஜி புர்ஹானை பெருத்தவரை தாம் பெற்றதை பிறருக்கு திருப்பி தர வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். பின்தங்கிய சமூகங்களை ஆதரிப்பதாக இருந்தாலும், குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி செய்வதாக இருந்தாலும் அல்லது நெருக்கடிகளின் போதும் பேரிடர்களின் போதும் உதவி வழங்கினாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்கிறார்.  அவரைப் பொறுத்தவரை, வெற்றி என்பது பகிரப்படும்போது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்கிறார்.

உணவகத் தொழிலில் பல அறைகூவல்கள் இருந்தபோதிலும், தரம், வாடிக்கையாளர் திருப்தி என்பதே தனது முதல் நோக்கம் என்று கூறி வருகிறார் ஹாஜி புர்ஹான்

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக முஸ்லிம் தலைமைத்துவ மன்றத்தில் ஹாஜி புர்ஹான் ஒரு மதிப்புமிக்க விருதைப் பெற்றுள்ளது அவரது சாதனைக்கு மற்றொரு மகுடம். கடின உழைப்பு, வலுவான குடும்ப உறவுகள், இரக்கமுள்ள இதயம் ஆகியவை அசாதாரண சாதனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

ஹாஜி புர்ஹானின் சாதனைகளும் சமூக சேவைகளும் தொடர நம்பிக்கை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset