செய்திகள் மலேசியா
தற்காப்பு, கனிம வளத் துறையில் ஒத்துழைக்க மலேசியா, தென் கொரியா இணக்கம்
சியோல்:
தற்காப்பு, கனிம வளத் துறையில் ஒத்துழைக்க மலேசியா, தென்கொரியா நாடுகள் இணக்கம் கொண்டுள்ளது.
மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தென் கொரியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் மலேசியப் பேராளர் குழுவும் சென்றுள்ளது.
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலைப் பிரதமர் அன்வார் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், மலேசியாவின் இருப்பிலிருந்து கனிம வளங்களை தென்கொரியாவுக்கு விநியோகம் செய்வது, தற்காப்பு தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை தொடர்பான ஒப்பந்தத்தில் தென்கொரியாவும் மலேசியாவும் கையெழுத்திட்டன.
அடுத்த ஆண்டுக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கடப்பாடு கொண்டுள்ளதாக இருநாட்டுத் தலைவர்களும் கூறினர்.
சேவைகள், முதலீடு, தூய எரிசக்தி ஆகியவை இதில் அடங்கும் என்று தென்கொரிய அதிபர் மாளிகை தெரிவித்தது.
தென்கொரியாவிடமிருந்து புதிய போர் விமானங்களை வாங்க மலேசியா ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பது தொடர்பாக அறநிறுவனம் ஒன்றை அமைக்க மலேசியாவும் தென்கொரியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
ரஷ்யா-வடகொரியா ராணுவ ஒத்துழைப்பு, காஸாவிலும் லெபனானிலும் நிலவும் மனிதாபிமான நெருக்கடிநிலை ஆகியவை குறித்து அதிபர் யூன்னும் பிரதமர் அன்வாரும் கவலை தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 26, 2024, 5:22 pm
கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்: டிரம்ப்
November 26, 2024, 5:13 pm
மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு: டிசம்பர் 21ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது: முனைவர் செல்வஜோதி தகவல்
November 26, 2024, 4:33 pm
தென் கொரியாவிற்கான அதிகாரப்பூர்வப் பயணம் 32.8 பில்லியனை முதலீட்டுக்கு வழி வகுத்துள்ளது: பிரதமர் அன்வார்
November 26, 2024, 3:41 pm
எஸ்பிஎம் தேர்வு காலக்கட்டத்தில் திரெங்கானுவில் 8 பள்ளிகள் வெள்ளதால் பாதிக்கப்படும்: ஜெலானி சுலோங்
November 26, 2024, 3:21 pm
ஒரிஜினல் பினாங்கு நாசிகண்டார் காயு அதிபர் ஹாஜி புர்ஹான் இங்கிலாந்தின் உயர் விருது பெற்றார்
November 26, 2024, 3:16 pm
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பள்ளிகளில் தேர்வுகளை ரத்து செய்யலாம்: ஃபட்லினா சிடேக்
November 26, 2024, 2:47 pm
பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர்.ஜலிஹா முஸ்தாஃபாவின் இளைய சகோதரி காலமானார்
November 26, 2024, 2:46 pm
அரசு ஊழியர்களுக்கான தங்குமிடத்திற்கான கால அவகாசம் குறித்து அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது: ஜலிஹா முஸ்தாஃபா
November 26, 2024, 11:04 am