நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

24 மணி நேர சமூக பாதுகாப்பை வழங்க பெர்கேசோ இலக்கு

கோலாலம்பூர்:

சந்தாதாரர்களுக்கு 24 மணி நேர சமூக பாதுகாப்பை வழங்க பெர்கேசோ இலக்கு கொண்டுள்ளது.

பெர்கேசோவின் திட்டமிடல் பிரிவின் துணை இயக்குநர் எட்மண்ட் சியோங் இதனை கூறினார்.

கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மலேசியத் தொழிலாளர்கள் அடுத்த ஆண்டு மத்தியில் 24 மணிநேர சமூகப்   பாதுகாப்பை அனுபவிக்கலாம்.

அதே வேளையில் தொழில்சார் பாதிப்புகள் திட்டத்தை நாள் முழுவதும் நீட்டிக்க முயற்சிகள் உள்ளன.

24 மணி நேர பாதுகாப்பை வழங்கும் வகையில் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் திருத்த விரும்புகிறது.

சட்டத்தின் திருத்தத்திற்குப் பிறகு பெர்கேசோ  அனைத்து விபத்துக்களுக்கும், வேலை சம்பந்தமில்லாத, வேலை நேரத்திற்கு வெளியே நிகழும் விபத்துக்களுக்கும் பாதுகாப்பை வழங்கும்ச்

வெளிநாட்டுப் பயணங்களில் காயமடைந்த மலேசியத் தொழிலாளர்களையும் இது உள்ளடக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset