
செய்திகள் வணிகம்
சமூக ஊடகங்கள் மூலம் மலிந்துவரும் ஊடாக மோசடி: இலங்கை அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு:
சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரத் தயார் நிலைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பல்வேறு வங்கிகள், வணிக நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி நன்கொடைகள், பணப் பரிசுகள், வெற்றிகள், வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பெறுவதற்கு உடனடியாக பதிவுசெய்துக் கொள்ளுமாறு பகிரப்படும் போலி தகவல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
பேஸ்புக், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகள் போன்றவற்றின் ஊடாக தகவல்களை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.
போலி செய்தியின் இணைப்புகளை அணுகுவதன் மூலம் மோசடிக்காரர்கள் தங்களுடன் இணைக்கப்பட்ட நபர்களின் கணினி, தொலைபேசியில் உள்ள தகவல்களைத் திருடி முறைகேடான பண மோசடியில் ஈடுபடுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அவர்களை தொடர்புக் கொண்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவ்வாறு உறுதிப்படுத்த முடியாத செய்திகளை அணுகுவதை தவிர்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில தரப்பினர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றிருப்பதாக அல்லது அன்பளிப்புகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகக் கூறி, அவற்றைப் பெற்றுக் கொள்ள ஒருதொகை பணத்தை வைப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியும் நிதி மோசடி செய்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm