நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மீண்டும் தொடங்கிய அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு: வைரலாகும் காணொலி 

சென்னை: 

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து உருவாகிக்கொண்டிருக்கும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. 

இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் ஹீரோவாக நடிக்கும் நிலையில் நடிகர்கள் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். 
இசையமைப்பாளர் அனிருத் விடாமுயற்சி படத்திற்கு இசையமைக்கும் நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. 

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்று அசர்பைஜனில் தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே மிகப்பெரிய காரில் அந்தரத்தில் அஜித்குமார் சுழன்று நடித்துள்ளார். 

இது தொடர்பாக வெளிடப்பட்டுள்ள காணொலிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இவ்வாண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset