
செய்திகள் கலைகள்
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கும் தெலுங்கு படம்
ஹைதராபாத்:
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கும் ஹதராபாத்துக்கும் நீண்ட தொடர்பு உண்டு.
அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கிரிக்கெட் விளையாடியதால் தெலுங்கு மக்களுக்கு டேவிட் வார்னர் அவ்வளவு பரிச்சயமானவர். அதுமட்டுமன்றி டேவிட் வார்னர் தெலுங்கு சினிமாவின் ரசிகரும்கூட. `புஷ்பா' படத்தின் ரிலீஸ் சமயத்தில் `ஸ்ரீ வள்ளி' பாடலுக்கு அவர் நடனமாடி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்ட ரீல் அதிரடி வைரலும் ஆனது.
அதன் பிறகு அப்படம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் சில பதிவுகளைப் போட்டிருக்கிறார். சமீபத்தில்கூட மெல்போர்னில் டேவிட் வார்னர் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பதாக ஒரு புகைப்படம் வைரலானது.
இந்த புகைப்படத்தை பார்த்ததும்`அவர் எந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்' எனப் பலருக்கும் கேள்வி இருந்தது. அக்கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.
`ராபின்ஹுட்' என்ற டோலிவுட் திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தில் நடிகர் நித்தின், நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவி ஷங்கர், ``இப் படத்தில் டேவிட் வார்னர் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்" எனக் கூறி அப்டேட் கொடுத்திருக்கிறார். `ராபின்ஹுட்' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 9, 2025, 5:32 pm
தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா
March 6, 2025, 11:49 am
இசைஞானி இளையராஜா தலைமையில் லண்டனில் முதல் சிம்போனி அரங்கேற்றம்
March 5, 2025, 2:21 pm
LADY SUPERSTAR என்று தன்னை அழைக்க வேண்டாம்: நடிகை நயன்தாரா அறிக்கை
March 4, 2025, 3:32 pm