நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

LADY SUPERSTAR என்று தன்னை அழைக்க வேண்டாம்: நடிகை நயன்தாரா அறிக்கை

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நயன்தாரா சமீபத்தில் அவர் நடித்த படங்கள் யாவும் சரியாக போகாததால் இனிமேல் தன்னை யாரும் LADY SUPERSTAR என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொண்டார் 

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, நெற்றிக்கண், அன்னப்பூரணி, உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து படுதோல்வியைச் சந்தித்தது 

மேலும், நடிகர் தனுஷுடன் சில முரண்பாடும் ஏற்பட்டது தமிழ்ச்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது 

இந்நிலையில் தனக்குத் தானே லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம்  சூட்டிக்கொண்ட அவர், தற்போது அந்த பட்டத்தை அவர் துறந்துள்ளார் 

கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா, அதே ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்த சந்திரமுகி படத்திலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை நயன்தாரா

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset