நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா

மும்பை: 

அமெரிக்காவில் கணவர் நிக் ஜோன்சுடன் வசித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதனால் எப்போதாவதுதான் இந்தியா வருகிறார். 

2000ம் ஆண்டுகளில் இவர் சில சொத்துகளை மும்பையில் வாங்கினார். அதை விற்க முடிவு செய்திருந்தார் பிரியங்கா. 

அதன்படி அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு இருக்கும் 3 வீடுகளை அவர் ரூ.13 கோடிக்கு விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பத்திரப்பதிவு இம்மாதம் நடைபெற உள்ளது. 

அமெரிக்காவில் பெரிய பரப்பளவில் சொந்த பங்களா இருப்பதால் இந்தியாவில் தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என பிரியங்கா நினைக்கிறார். அதற்காக மும்பை அந்தேரியில் உள்ள ஒரு வீட்டை மட்டும் விற்காமல் வைத்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset