நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தற்கொலைக்கு முயற்சித்த பின்னணி பாடகி கல்பனா மருத்துவமனையில் அனுமதி: போலீஸ் விசாரணை தொடங்கியது

ஹைதராபாத் -

பிரபல பின்னணி பாடகி கல்பனா (44) தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் அவசர நிலையில் சுயநினைவிழந்து கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடிய கல்பனா, தனது திறமையால் பரந்த ரசிகர் மன்றத்தை கொண்டிருந்தார்.

என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான அவர், பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் கல்பனாவின் நிலைமை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset