நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது: நடிகை நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் 

சென்னை: 

2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியது 

இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார்.

படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர். 

இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது.  

இந்த விழாவில் நடிகைகள் நயன்தாரா, ரெஜினா, குஷ்பூ, மீனா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset