நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது: தைவானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது 

சியோல்:

கொரியன் ஏர்லைன்ஸின் (Korean Airlines) KE189 விமானத்தில் ஏற்பட்ட கோளாற்றால் அது கட்டுப்பாட்டை இழந்தது. அந்தச் சம்பவத்தில் 13 பயணிகள் காயமடைந்தனர். 

அதனைத் தொடர்ந்து விமானம் நேற்று (23 ஜூன்) பத்திரமாகத் தைவானின் தாய்சுங் (Taichung) நகரில் தரையிறங்கியதாக Taipei Times நாளேடு தெரிவித்தது.

சனிக்கிழமை (22 ஜூன்) விமானம் தென் கொரியாவின் இன்சியோன் (Incheon) நகரிலிருந்து தைவானின் தாய்சுங் (Taichung) நகருக்குப் புறப்பட்டது. அதில் 125 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் அதன் அழுத்தக் கட்டமைப்பில் (pressurization system) கோளாறு ஏற்பட்டது.

அப்போது விமானம் Jeju தீவுக்கு மேல் பறந்துகொண்டிருந்ததாக Taipei Times தெரிவித்தது.

15 நிமிடங்களில் விமானம் 8,000 மீட்டர் உயரத்துக்கு மேல் கீழிறங்கியது என்று Flightradar24 தளம் காட்டுகிறது.

அதன் பின் விமானம் இன்சியோன் விமான நிலையத்துக்குத் திரும்பி அங்குத் தரையிறங்கியது.

தலைவலி அல்லது காது வலி ஏற்பட்ட 13 பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவத்தில் பயந்த பயணிகள் சிலர் சிறிது காலம் விமானப்  பயணத்தைத் தவிர்க்கப்போவதாகக் கூறினர்.

ஆதாரம்:  Taipei Times

தொடர்புடைய செய்திகள்

+ - reset