நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர் 8 மாதங்களில் சுட்டுக் கொலை

ஹூஸ்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை சம்பவத்தின்போது 32 வயதான இந்தியர் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாசரி கோபிகிருஷ்ணன்  டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள ஒரு பல்பொருள் கடையில் பணியாற்றி வந்தார்.

அந்த கடையில் கொள்ளையடிப்பதற்காக புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கோபிகிருஷ்ணன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். .

முகமூடி அணிந்த நபர்கள் கோபிகிருஷ்ணனை பலமுறை சுட்டுவிட்டு பணம் மற்றும் பொருள்களைத் திருடிச் செல்லும் விடியோ காட்சி இணையதளத்தில் பரவத் தொடங்கியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset