நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பொலிவியாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு

லா பாஸ்:

பொலிவியாவில் அதிபர் ஆட்சியைக் கவிழ்க்கும் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதையடுத்து, ராணுவ தலைமை தளபதியாக இருந்த ஜுவான் ஜோஸ் கைது செய்யப்பட்டார்.

பொலிவியாவில் பல்வேறு அரசியல் சிக்கலுக்கு பிறகு அதிபராக  லூயிஸ் ஆர்சே வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், பொலிவியாவின் ஆட்சித் தலைநகரான லா பாஸில், அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ள முரிலோ சதுக்கத்தை ராணுவம் புதன்கிழமை கைப்பற்றியது.  அந்தப் பகுதியை பீரங்கிகளுடன் ஏராளமான ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர்.

தனது அமைச்சர்களுடன் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஆர்சே, ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக போராட்டத்தை நடத்துமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதையடுத்து, முரிலோ சதுக்கத்துக்குச் செல்லும் சாலைகளில் போராட்டக்காரர்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சிக் கவிழ்ப்பை ராணுவம் கைவிடும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதனால் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset