நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போராட்டத்தால் வரி மசோதாவை திரும்ப பெற்றது கென்யா

நைரோபி:

புதிய வரி விதிப்பு மசோதாவுக்கு எதிராக கடுமையான போராட்டம் வெடித்ததால் அதை கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ திரும்பப் பெற்றார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிய வரிகளை விதிப்பதற்கான பொருளாதார மசோதா  அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் பொதுமக்களின் உணர்வுகளை ஏற்று, அந்த மசோதாவைக் கைவிடுகிறேன். அரசின் நடவடிக்கைகளில் அனைத்துத் தரப்பினரும் கூடி கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்யா முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இந்த மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்காக நாடாளுமன்றத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள் ஒரு பகுதிக்குத் தீவைத்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset