நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு

வாஷிங்டன்:

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின.

விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000-ஆம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது.

பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030-ம் ஆண்டு முடிகின்றது.

அதன்பின்னர் விண் வெளியிலிருந்து அதனைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தி வளிமண்டலத்திற்கு கொண்டு வருவதற்காக பிரத்தியேக விண்கலம் உருவாக்கப்படுகிறது.  

இந்த பணியை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது. 

இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.5 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பசிபிக் பெருங்கடலில் தள்ளக் கூடிய ஒரு வாகனத்தை உருவாக்கவுள்ளது.

இதுதொடர்பாக நாசா கூறும்போது, யு.எஸ். டி.ஆர்.பிட் விண்கலத்தை உருவாக்கி வழங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும். இது விண்கலம் தயாரிப்புக்கான தொகை மட்டுமே.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset