நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

4 மில்லியன் டாலர்களை வென்ற நபர் திடீரென உயிரிழப்பு: சிங்கப்பூர் மெரினா பே சூதாட்ட மையத்தில் பரபரப்பு

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சூதாட்ட மையத்தில் அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. 

நபர் 4 மில்லியன் டாலர்களை வென்ற சிறிது நேரத்திலேயே இறந்து விட்டார். 

பெயரிடப்படாத நபர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

அந்த குறிப்பிட்ட அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் 4 மில்லியன் டாலர் ஜாக்பாட் வென்றார். 

கொண்டாட்டங்களுக்கு நடுவே அந்த நபர் சரிந்து விழுந்தார். 

அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் உடனடியாக சூதாட்ட விடுதி ஊழியர்களால் தொடங்கப்பட்டன. உடனே அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. 

இந்த காணொலி சமூக ஊடக தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset