நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

12-ஆவது முறையாக தந்தையானார் எலான் மஸ்க்

வாஷிங்டன்:

உலகப் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனருமான எலாம் மஸ்க் தனது 12-ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

தற்போது பிறந்துள்ள 12-ஆவது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.

எலான் மஸ்க் - சிவோன் சிலிஸ் ஜோடிக்கு இது 3-ஆவது குழந்தையாகும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு எலான் - சிலிஸ் இணையருக்கு ஸ்டிரைடர் - ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

இது தவிர பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

தற்போது ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று ப்ளூமன்பெர்க் அறிக்கை குறிப்பிடுகிறது.

எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிராதவராகவே இருந்து வருகிறார்.

சமீபத்தில் தனது நிறுவனத்துக்கு இண்டர்ன்ஷிப் வந்த பெண்ணுக்கு பாலியல் துப்புறுதல் அளித்ததாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset