நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியாவின்  நிதியுதவியால் பொருளாதார நெருக்கடி சமாளிப்பு: இலங்கை அதிபர் ரணில்

கொழும்பு:

இந்தியா வழங்கிய ரூ.29,000 கோடி நிதியுதவியால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடிந்தது என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவர்மேலும் கூறுகையில், இந்திய பிரதமர் மோடி பதவியேற்ற விழாவுக்கு சென்றபோது அவருடன் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது இலங்கை-இந்தியா இடையேயான மின்சார இணைப்புத் திட்டம், சம்பூர் சூரியசக்தி திட்டம், திரிகோணமலை மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் பேசினேன்.

நாகப்பட்டினத்தில் இருந்து திரிகோணமலைக்கு குழாய் மூலம் எண்ணெய் விநியோகிக்கும் திட்டத்துக்கான இறுதி அறிக்கை உள்பட இருநாடுகள் இடையேயான பல முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதித்தோம்.

பொருளாதார நெருக்கடியில் இரண்டு ஆண்டுகள் இலங்கை சிக்கித் தவித்தது. அப்போது ரூ.29,000 கோடி வரையிலான கடனுதவியை இந்தியா வழங்கியதால் அதிலிருந்து மீண்டு வர முடிந்தது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset