நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

10ஆவது சீசன் சூப்பர் சிங்கர் மகுடத்தை ஜான் ஜெரோம் வென்று சாதனை

சென்னை:

விஜய் டிவியில் 10ஆவது சீசனாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.

மாபெரும் இறுதி சுற்று நேரலையாக நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்து விஜய் டிவி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகியது.

இதில் இந்த 10ஆவது சீசனில் சாம்பியன் பட்டத்தை ஜான் ஜெரோம் தட்டித் தூக்கியுள்ளார். 

இறுதி பாடலாக நான் ஆட்டோக்காரன் பாடலை பாடி ஒட்டுமொத்த அரங்கத்தையே ஆட்டம் போட வைத்தார்.

May be an image of 4 people, people smiling and text

மேலும் வெற்றி மகுடத்தை ஜான் பெற்றுள்ளது ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. 

சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் மகுடம் சூடியுள்ள பாடகர் ஜான் ஜெரோமுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் இரண்டாவது வெற்றியாளராக ஜீவிதாவும் மூன்றாவது வெற்றியாளராக வைஷ்ணவியும்  வென்று அசத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset