நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை உயர்ந்தது 

சென்னை:

சித்தூர் மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், மழையால் மகசூல் குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் அறுவடைக்கு முன்பே அழுகிவிடுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 

இதனால் தமிழ்நாடு, கர்நாடகாவுக்கான ஏற்றுமதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் குப்பம், வி.கோட்டா, பைரெட்டி பள்ளி, மதனப்பள்ளி, சவுடை பள்ளி, புங்கனூர், பங்காரு பாளையம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட மண்டலங்களில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

நிலத்தில் விதை தூவிய நாளில் இருந்து 90 நாட்களில் விவசாயிகள் தக்காளி அறுவடை செய்கின்றனர். 

இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். தொடர்ந்து சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் தக்காளி மகசூல் வெகுவாக குறைந்தது. இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. 

தற்போது 1 கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் தக்காளி மகசூல் பாதிப்படைந்துள்ளதால், விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset