நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

GOAT படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடலை தன் சகோதரி பவதாரிணியின் குரலை AI தொழில்நுட்படத்தில் உருவாக்கியது குறித்து யுவன் உருக்கம்

சென்னை: 

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரின் GOAT படத்தின் சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் வெளியாகி உள்ளது.

இதில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை AI தொழில்நுட்படத்தின் மூலம் உருவாக்கி, ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது GOAT படக்குழு.

தன்னுடைய சகோதரி பவதாரிணியின் குரலை பயன்படுத்தியது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார்.

அதில், “GOAT படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இப் பாடலை கம்போஸ் செய்யும் போது நானும் வெங்கட்பிரபும், இது என் தங்கைக்கான பாடல் என உணர்ந்தோம்.

அவள் மருத்துவமனையில் இருந்து வந்ததும் பாட வைத்து பதிவு செய்யலாம் என நினைத்தோம். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. 

அவளின் குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை. இப் பாடல் உருவாக காரணமான அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset