நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனப் பிரதமர் லீ கியாங் இன்று முதல் மலேசியா பயணமாகின்றார்

கோலாலம்பூர்: 

இன்று முதல் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணமாக வரும் சீன பிரதமர் லீ கியாங்கைச் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் அன்வார் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளார். 

இந்தச் சந்திப்பின் போது, ​​இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச பிரச்சனைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று விஸ்மா புத்ராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இரு தலைவர்களும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுனர். 

இலக்கவியல்பொருளாதாரம், பசுமை மேம்பாடு, சுற்றுலா, வீட்டுவசதி மற்றும் நகரமயமாக்கல் மேம்பாடு, உயர்கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சீனாவிற்கு வேளாண் பொருட்களின் ஏற்றுமதி ஆகியவை குறித்து இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும். 

லீ கியாங்கின் மலேசியா வருகையானது, மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசத் தந்திர உறவுகளின் 50-ஆவது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாகும்.

இரு தலைவர்களும் 50-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இரவு விருந்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

கூடுதலாக, லி கியாங் யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் இப்ராகிமையும் பார்வையிடுவார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset