
செய்திகள் மலேசியா
காசாவுக்கு உதவிப் பொருட்களை இணைந்து வழங்க மலேசியா, துருக்கி ஒப்புக் கொண்டுள்ளன: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
பாலஸ்தீனத்தின் காசாவில் மனிதாபிமான உதவிகளை இணைந்து வழங்க மலேசியாவும் துருக்கியும் ஒப்புக் கொண்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நேற்று துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan-னுடன் தொலைபேசி உரையாடல் மூலம் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று என்று பிரதமர் அன்வார் தன் முகநூல் பக்கத்தில் பதிவிடுள்ளார்.
Recep Tayyip Erdogan சமீபத்தில் இத்தாலியில் நடந்த G7 உச்சி மாநாட்டில் காசாவில் நடந்த படுகொலைகளுக்குக் கவலையையும் எதிர்ப்பையும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்தாண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் மலேசியாவிற்கு வருகை தருமாறு எர்டோகனுக்கு பிரதமர் அன்வார் அழைப்பு விடுத்துள்ளார்.
1964-ம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி தொடங்கிய மலேசியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான அரசத் தந்திர உறவின் 60-ஆவது ஆண்டு நிறைவு பெறவுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am