நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முட்டை விலையை 3 காசுகள் குறைத்த பிரதமருக்கு நன்றி: மொஹைதின்

கோலாலம்பூர்:

முட்டை விலையை 3 காசுகள் குறைத்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி.

தேசியக் கூட்டணி தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.

நாட்டில் பொருட்களின் விலையை குறைப்பதற்கான விரிவான வழிமுறையை பிரதமர் அறிவிப்பார் என நான் எதிர்பார்த்தேன்.

இருந்தாலும் மானிய இலக்கின் விளைவாக அரசாங்க செலவின சேமிப்புத் தொகையில்  4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருளாதாரத் திட்டங்கள்,

மக்கள் உதவி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால் அவரது எதிர்பார்ப்புகள் தவறாகிவிட்டது.

இதில் அறிவிக்கப்பட்டது முட்டையின் விலை குறைப்பு மட்டுமே. இதில் அரசு செலவினம் 100 மில்லியன் ரிங்கிட் மட்டுமே.

இதுகுறித்து அவர் முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில்,  முட்டை விலையை குறைத்த பிரதமருக்கு நன்றி.

இருந்தாலும் எனது எதிர்பார்ப்பு பொய்யானது என்று முன்னாள் பிரதமருமான அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset