நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

33 ஆண்டுகளாக எனக்காக நின்ற உங்களுக்காக அடுத்த 30 ஆண்டுகளுக்கு நான் நிற்க வேண்டும்: ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்

 புக்கிட் ஜலீல்:

கோலாலம்பூர் புக்கிட் ஜலீல் அரங்கில் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நடைபெறும் முதல் சினிமா விழா என்பதால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இந்த விழாவில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ, நடிகை பூஜா ஹெக்டே, பிரியாமணி, நாசர், பிரபு தேவா உட்பட பல்வேறு திரைக் கலைஞர்கள், பாடகர்கள் என பெரும் நட்சத்திர பட்டாளமே பங்கேற்றுள்ளது.

“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். நான் சினிமாவுக்கு வரும்போது எதிர்கொள்ளாத விமர்சனங்கள் இல்லை. நான் எதிர்கொள்ளாத அவமானங்கள் இல்லை. நிறைய காயங்களை தாண்டிதான் வந்திருக்கிறேன். அந்த மாதிரி நாட்களில் எல்லாம் முதல் நாளில் இருந்தே என்னுடன் நின்றது என் ரசிகர்கள்தான். ஒரு நாள், இரண்டு நாள் இல்லை. 33 ஆண்டுகளாக எனக்காக நின்ற அவர்களுக்காக அடுத்த 30 ஆண்டுகளுக்கு நான் நிற்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

எனக்கு ஒன்று என்றால் தியேட்டரில் வந்து நிற்கிறார்கள். நாளைக்கு அவர்களுக்கு ஒன்று என்றால் நான் அவர்கள் வீட்டில் போய் நிற்க விருப்பப்படுகிறேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றி என்று சொல்லிவிட்டு போகக் கூடியவன் கிடையாது. நன்றிக் கடனை தீர்த்துவிட்டுச் செல்பவன்.

May be an image of crowd

நமக்கு நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ வலுவான எதிரிகள் இருக்க வேண்டும். சும்மா வருபவர்களை எல்லாம் எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது, இல்லையா? வலுவாக இருப்பவர்களைதானே எதிர்க்க முடியும். அப்போதுதானே நாம் ஜெயிக்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறோம் என்று அர்த்தம். சமீபமாக நம்மைப் பற்றி ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் தனியாக வருவாரா, அணியாக வருவாரா என்று. நாம் எப்போது தனியாக இருந்திருக்கிறோம்.

May be an image of one or more people, crowd and text

33 ஆண்டுகளாக உங்களோடுதானே இருந்திருக்கிறேன். எனவே நாம் ஒரு மிகப்பெரிய அணிதானே? இப்போது கூட வெளிப்படையாக எதுவும் சொல்லமாட்டேன் என்கிறாரே என்ற கேள்வி எழலாம். 

சஸ்பென்ஸ் என்று ஒன்று இருந்தால் தானே கிக் இருக்கும். இதையெல்லாம் நான் கைதட்டலுக்காக பேசவில்லை. மக்களுக்காக பேசுகிறேன். எல்லாவற்றையும் விட முக்கியம். செய்வதைத்தான் சொல்ல வேண்டும். எனவே 2026 வரலாறு திரும்புகிறது. அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்போம்” இவ்வாறு விஜய் பேசினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset