நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பழிவாங்குவதற்காக அல்ல, எனது கொள்கையளவில் தொடர்வேன்: நஜிப்

புத்ராஜெயா:

பழிவாங்குவதற்காக அல்ல, எனது கொள்கையளவில் தொடர்வேன் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

நாட்டில் மிகவும் பிரபலமான நிதி ஊழலில் ஏழு ஆண்டு விசாரணைக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் ரசாக்கிற்கு நேற்று புத்ராஜெயாவில் உள்ள உயர் நீதிமன்றம் 1எம்டிபி வழக்கில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவர் சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பணமோசடி தொடர்பான 21 குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.

இந்த தண்டனைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில், நஜிப் எழுதிய கடிதத்தையும் அவரின் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி வாசித்தார்.

என் இதயம் கனமாக இருந்தாலும், அமைதியான மனதுடன் இதை எழுதுகிறேன்.

இந்தப் போராட்டத்தை நான் தனியாகச் சுமக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய நேரங்கள் உண்டு. 

ஆனாலும் நான் தொடர்ந்து போராடுவதில் உறுதியாக இருக்கிறேன். வெறுப்பின் காரணமாக அல்ல, கொள்கையின் காரணமாக.
நான் கோருவது சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகளையும், வழங்கப்பட்டவற்றையும் மட்டுமே. எனது நோக்கம் ஒருபோதும் 
மாறவில்லை: 

நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் பங்களிக்கும் என் போராட்டம் தொடரும்.

இந்தப் போராட்டம் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் முயற்சி அல்ல.

இது நீதியை நிலைநிறுத்துவதற்கும், அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், அச்சமோ பாரபட்சமோ இல்லாமல் செயல்படுத்தப்படும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் ஒரு முயற்சி என்று நஜிப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset