நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் சாதித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்வியமைச்சர் சந்திப்பார்: குணராஜ்

கோலாலம்பூர்:

அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் சாதித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் விரைவில் சந்திப்பார்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 24 மலேசிய மாணவர்கள், ஒன்பது முக்கிய பிரிவுகளில் பங்கேற்று 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.

மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றிகளில், சுமோ ஜூனியர், ட்ரோன் கால்பந்து பிரிவுகளில் சாம்பியன் பட்டங்களை வென்றது அடங்கும்.

இப்போட்டியில் சாதித்த மாணவர்களை கல்வியமைச்சர் சந்திக்கவில்லை. குறிப்பாக அவர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் இருந்தன.

இதன் அடிப்படையில் பிரச்சினையை நான் கல்வியமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றேன்.

அனைத்து உலக போட்டிகளில் சாதித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என நான் அவரை கேட்டுக் கொண்டேன்.

கல்வியமைச்சரும் எனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது சமூக ஊடக பக்கங்களில் மாணவர்களின் சாதனைகளுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில் விரைவில் பினாங்கு மாநிலத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி அதில் மாணவர்களை சந்திப்பதுடன் அவர்களை அங்கீகரிக்கவும் கல்வியமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

ஆக இந்த மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் வாயிலாக உரிய பாராட்டுதலும் அங்கீகாரமும் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

மேலும் அனைத்து உலக போட்டியில் சாதித்த அம்மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset