நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏழு பில்லியன் ரிங்கிட் டீசல் மானியம் வழங்கப்படுகிறது: பிரதமர்

கோலாலம்பூர்:

நாட்டில் இலக்கிடப்பட்ட டீசல் மானியத் திட்டத்தால்  மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் அன்வார் இப்ராகிம், இந்த  டீசல் மானியக் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளார்.

தீபகற்ப மலேசியாவில் இன்னமும் ஏறக்குறைய ஏழு பில்லியன் ரிங்கிட்டுக்கு டீசல் தொடர்பான மானியங்கள் வழங்கப்படுகின்றன.

டீசலுக்கு வழங்கப்படும் மானியங்கள் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை.

டீசல் மானியங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதை டீசல் மானியக் கொள்கை உறுதி செய்கிறது.

மேலும் மானியங்கள் வீணடிக்காமல் இருப்பது மானியக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். 

அதிலிருந்து கிடைக்கும் சேமிப்புகள் பரந்த அளவுக்கு மக்களுக்குத் திரும்புவதை உறுதி செய்யும்.

மக்களுக்கு அதிக பயனளிக்கும் வகையில் கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவத்து உள்ளிட்ட துறைகளுக்கு மிச்சமாகும் மானியம் பயன்படுத்தப்படும், என்று அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset