செய்திகள் இந்தியா
ஏர் இந்தியா விமானப் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு
புதுடெல்லி:
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கடந்த வாரம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
இது குறித்து மதுரஸ் பால் என்ற அந்தப் பயணி வெளியிட்ட எக்ஸ்பதிவில், “ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்றவெட்டக்கூடிய உலோகத் துண்டுகிடந்தது.
வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திபழ சாட்டில் மறைந்திருந்த அந்த பிளேடை வாயில் போட்டு மென்ற பிறகுதான் தெரிய வந்தது அது உலோகத் துண்டு என்று. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால், குழந்தை அந்தஉணவை சாப்பிட்டிருந்தால் பெரும் பிரச்சினை உருவாகி இருக்கலாம். நிச்சயமாக ஏர் இந்தியா கேட்டரிங் சேவையின் மீது குறைபாடு உள்ளது.
புகைப்படம் வெளியீடு: எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் துப்பிய உலோகத் துண்டு மற்றும் பரிமாறப்பட்ட உணவின் படங்களை இணைத்துள்ளேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமானம் வழங்கிய உணவில் பிளேடு இருந்ததை அந்த நிறுவனம் நேற்று உறுதிப்படுத்தியது.
ஏர் இந்தியா ஒப்புதல்: இதுகுறித்து ஏர் இந்தியாவின் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி ராஜேஷ் டோக்ரா ஏஎன்ஐசெய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “ஏர் இந்தியா வாடிக்கையாளர் உணவில் இருந்த பிளேடு கேட்டரிங் பார்ட்னர் காய்கறி பதப்படுத்தும் இயந்திரத்தில் இருந்து வந்தது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழாமல்தடுக்கும் வகையில், காய்கறிகளை பதப்படுத்துதல் மற்றும்வெட்டுதல் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கான அமைப்பை வலுப்படுத்துமாறு கேட்டரிங் பார்ட்னரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
