நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹஜ் யாத்திரை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர்: அமைச்சர் நயீம் மொக்தார்

மெக்கா:

ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர் என்று பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய  விவகாரத் துறையின் அமைச்சர் நயீம் மொக்தார் கூறினார்.

இவ்வாண்டு மலேசியர்கள் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இதுவரை கிட்டத்தட்ட 8 பேர் புனித பூமியில் மரணமடைந்துள்ளனர். இதில் 8ஆவது மரண சம்பவம் கடந்த சனிக்கிழமை பதிவாகியது என்று அவர் கூறினார்.

மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் சுவாச சிக்கல், உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர, இருதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset