
செய்திகள் மலேசியா
சுங்கை பாக்காப் இடைத் தேர்தலை முன்னிட்டு 600 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: சைபுடின்
நிபோங் திபால் -
சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு 600 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.
சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் பாதுகாப்புக்காக போலீசார் தொடர்ந்து பணிகளை மேற்கொள்வார்கள்.
ஆகையால் வரும் ஜூலை 6ஆம் தேதி வாக்காளர்களாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற குடியிருப்பாளர்கள் கவலைப்படவோ பயப்படவோ வேண்டாம்.
வேட்புமனு தாக்கல் தொடங்கி, 2ஆம் கட்ட தேர்தல் பிரசாரம், 3ஆம் கட்ட வாக்குப்பதிவு என மூன்று கட்டங்களாக போலிஸ் பணிக்கான தயாரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே பாதுகாப்பு விவகாரத்தில் கவலையை ஏற்படுத்தக்கூடிய எந்த கூறுகளும் இருக்கக்கூடாது என்று சுங்கை பாக்காப் இந்திய சமூகத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm