நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்

கோலாலம்பூர்:

ஐந்து மாநிலங்களில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழை  இன்று மதியம் வரை நீடிக்கும்.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூரில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்றும் வீசும்.

இது இன்று மதியம் 12 மணி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

இன்று  வெளியிடப்பட்ட எச்சரிக்கையின் மூலம் கெடாவில் உள்ள லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போகோக் செனா, பாடாங் தெராப், யான், பென்டாங், கோல மூடா ஆகிய பகுதிகளில் மோசமான வானிலை நிலவும்.

பேராக்கில் பாகன் டத்தோ, ஹிலிர் பேராக் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் சபாக் பெர்னாமில் கனமழை பெய்யும் என மெட் மலேசியா கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset