நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

ஆசியான் உள்ளடக்கிய வணிக மாநாடு வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாக அமைகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் 8ஆவது ஆசியான் உள்ளடக்கிய வணிக மாநாடு நடைபெற்றது.

இது  உள்ளடக்கிய வணிகத்தை (IB) அடிப்படையாகக் கொண்ட வட்டார பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான மலேசியாவின் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது.

இது முக்கிய வணிக மதிப்புச் சங்கிலியில் குறைந்த வருமானம், ஓரங்கட்டப்பட்ட குழுக்களை உள்ளடக்கியது.

மேலும் ஆசியான் வட்டாரத்தில் உள்ளடக்கிய வணிகத்தை சுற்றுச்சூழல் அமைப்பின் மேம்பாடு குறித்து விவாதிக்க அரசு அதிகாரிகள், நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், சர்வதேச அமைப்புகள் உட்பட கிட்டத்தட்ட 400 பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது.

பயனுள்ள, நிலையான வணிக மாதிரிகளை உருவாக்குவதில் வணிகங்கள்,  சமூகங்களின் திறன்களை மேம்படுத்துவதில் ஆசியான் உறுப்பு நாடுகளை ஆதரிப்பது  இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

குறிப்பாக பொருளாதார மீள்தன்மை என்பது வளர்ச்சியால் மட்டும் அளவிடப்படுவதில்லை.

மாறாக மக்கள் பொருளாதார செழிப்பை அனுபவிப்பதை உறுதி செய்வதன் மூலமும் அளவிடப்படுகிறது.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித்  துணை அமைச்சர் ரமணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset