நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது: ஷம்சுல் அஸ்ரி

சிப்பாங்:

2026 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கூறினார்.

நல்ல செய்தி இருக்க வேண்டும். அதை இன்னும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

மேலும் அது யாருக்கும் ஏமாற்றமளிக்கக் கூடாது.

ஆனால் அந்த நல்ல செய்தி அரசு ஊழியர்களுக்கு, மக்களுக்கும் ஆனது.

இங்கு 4ஆவது தேசிய நிர்வாகம், நேர்மை, ஊழல் எதிர்ப்பு ஆராய்ச்சி மாநாட்டின் தொடக்கத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

2024ஆம் ஆண்டு ஆகஸ்டில் புதிய பொது சேவை ஊதிய முறையின் கீழ் உயர் நிர்வாகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 7% சம்பள உயர்வைப் பெறுவார்கள்.

மேலும் நிர்வாகி, மேலாண்மை, தொழில்முறை குழுக்கள் 15% சம்பள உயர்வைப் பெறுவார்கள் என அரசாங்கம் அறிவித்தது.

இது படிப்படியாக செயல்படுத்தப்படும்.  முதல் கட்டம் 2024 டிசம்பரில் தொடங்கும்.

இரண்டாம் கட்டம் 2026 ஜனவரியில் தொடங்கும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset