நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் சுங்கை பாரு பிரச்சினையை வெளியாட்கள் அரசியலாக்க வேண்டாம்: ஜொஹாரி சாடல்

கோலாலம்பூர்:

கம்போங் சுங்கை பாரு பிரச்சினையை வெளியாட்கள் அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும்.

தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி கடுமையாக சாடினார்.

கம்போங் சுங்கை பாருவின் மறுவடிவமைப்பு பிரச்சினையை அரசியலாக்கும் வெளியாட்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இது கடந்த செப்டம்பர் 11 அன்று உள்ளூர்வாசிகளை உள்ளடக்கிய கலவரத்தைத் தூண்டியது.

கம்போங் சுங்கை பாருவில் வசிப்பவர்கள் இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்கிறார்கள்.

ஆனால் புரிந்து கொள்ளாதது போல் நடிக்கும் வெளியாட்கள் அதை அரசியலாக்கி வருகின்றனர்.

செப்டம்பர் 11 ஆம் தேதி சம்பவ இடத்திற்கு விரைந்த தனது ஐந்து அதிகாரிகள், கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பலர் வெளியாட்கள் என்பதைக் கண்டறிந்தனர்.

மேலும் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாத மக்களுக்கு ஒரு ஏமாற்று வேலை செய்யப்படுவது போல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset