நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் கடற்கரைகளில் எண்ணெய்ப் படலங்கள்: அனைத்துக் கடற்கரைகளும் இன்று மூடப்பட்டன

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் உள்ள பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே எண்ணெய் கசிந்ததால் செந்தோசாவின் அனைத்துக் கடற்கரைகளும் இன்று (15 ஜூன்) மூடப்பட்டன.

பொதுமக்கள் கரையில் இருக்க அனுமதி உண்டு. ஆனால் நீச்சல், கடல் நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்தோசா கோவ் குடியிருப்பு வட்டாரத்தில் வசிப்போரிடம் அது பற்றி தெரிவிக்கப்பட்டது.

பாலாவான், சிலோசொ, தஞ்சொங், செந்தோசா கோவ் ஆகிய கடற்கரைகளில் எண்ணெய்ப் படலங்கள் காணப்பட்டன.

நேற்று (14 ஜூன்) பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே இருக்கும் கடல் நீரில் எண்ணெய் கசிந்தது.

கனரகக் கப்பல் ஒன்று நகராமல் நின்றுகொண்டிருந்த கப்பலுடன் மோதியது. அதனால் நகராமல் இருந்த கப்பலில் இருந்த எண்ணெய் நீரில் கொட்டியது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset