நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

50 சதவீத இந்தியர்கள் டிஜிட்டல் நிதி மோசடியில் சிக்கியுள்ளனர்

புது டெல்லி:

3 ஆண்டுகளில் சுமார்  50 சதவீதம் இந்தியர்கள் நிதி மோசடிகளில் சிக்கியுள்ளனர் என்பது LOCALCIRCLES ஆய்வில் தெரிவியவந்துள்ளது.

யுபிஐ, கிரெடிட் கார்டுகளில்தான் அதிகமான மோசடிகள் நடைபெற்றுள்ளன.

இதுதொடர்பாக 302 மாவட்டங்களில் 23,000 பேரிடம் நடத்திய ஆய்வில், 53 சதவீதம் மக்கள் தங்களது கிரெடிட் கார்டுகளில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிகர்கள் அல்லது இணையதளங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைச் சுமத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

36 சதவீதம் பேர் இணையவழி பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐயில் நிதி மோசடியை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில், நிதி மோசடியில் சிக்கிய 10ல் 6 இந்தியர்கள் மோசடி குறித்து ரிசர்வ் வங்கி அல்லது பிற அமைப்புகளிடம் புகாரளிப்பதில்லை.

கடந்த ஆண்டில் நிதி மோசடியின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது.இதில் ரூ.13,930 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset