நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சீன கடன் செயலி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகள் முடக்கம்

புது டெல்லி: 

இந்தியாவில்  சீன கடன் செயலிகளை நடத்திய மோசடி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

ரூபே பிளஸ், லக்கி வாலட், ஃபிளாஸ் பைசா, பைசா கரோ, ஹை பைசா உள்ளிட்ட பெயர்களின் மோசடி கடன் செயலிகளை நடத்தி வந்துள்ளது.

செயலி மூலம் சிறிய அளவில் பணத்தை கடன் கொடுத்து, கைப்பேசியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்டி பணம் பறிப்பதைத் தொழிலாக இந்தக் கும்பல் செய்து வந்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ரவி நட்வர்லால் தாக்கர் உள்ளிட்ட சிலரின் உதவியுடன் சீனாவைச் சேர்ந்த  ஷுயு ஃபே என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி மோசடி கடன் செயலி, போலி நிறுவனங்கள் நடத்தி வந்துள்ளார்.

அவர்களின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset