
செய்திகள் இந்தியா
உலகளாவியக் காலநிலை கண்காணிப்புக்கான செயற்கைக்கோள் திட்டம் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தகவல்
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற 'திரிஷ்ணா' திட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்றது.
இஃது உயர்- தெளிவு இயற்கை வள மதிப்பீட்டிற்கான வெப்ப அகச்சிவப்பு - சிவப்பு 'இமேஜிங்' செயற்கைக்கோள் என்று அழைக்கப்படுகின்றது.
உலகம் முழுவதுமுள்ள மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை இந்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இந்தியா, ஐரோப்பா கடுமையான வெப்பத்தால் தாக்கப்பட்டு இருக்கும்போது, பூமியில் ஏற்படும் காலநிலை தாக்கங்களுக்கான தரவுப் புள்ளிகளைக் கண்காணிக்கும்.
அத்துடன், இது நிலத்திலிருந்து நீர் ஆவியாதலை அளவிடுகின்றது.
இந்தப் பணி மூலம் நீர் இருப்பு மற்றும் உருகும் பனிப்பாறைகள் உள்ளிட்ட இயக்கவியல் நடவடிக்கைகள், உயிர்க்கோளத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலத்தில் பயன்படுத்தப்படும் நீரை அளவிடுவது எப்படி என்பதை அறிய முடியும்.
செயற்கைக்கோள் வெப்ப முரண்பாடுகள் மற்றும் கூர்முனை, நிலத்தில் இருந்து வெப்ப உமிழ்வு, மேற்பரப்பு ஆற்றல், நகர்ப்புற வெப்பத்தீவுகள், பிற உலகளாவிய அளவுருக்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
இந்தச் செயல்பாட்டில், செயற்கைக்கோள், நீராவி, உலகம் முழுவதுமுள்ள வளிமண்டலத்திலுள்ள மேகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்யும்.
இது தற்போது 2025-ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் ஆயுட்காலத்துடன் இயங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 5:53 pm
திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
July 15, 2025, 2:21 pm
இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்
July 15, 2025, 2:16 pm
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியரை மீட்க இயலாது: இந்தியா கைவிரிப்பு
July 15, 2025, 11:40 am
காமராஜர் பிறந்தநாள் – மக்களின் தலைவர்
July 15, 2025, 11:17 am
உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm