
செய்திகள் இந்தியா
டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 13 வயது சிறுவன்: காவல்துறை கண்டுபிடித்தது
புதுடெல்லி
டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், மிரட்டல் விடுத்தவரைத் தேடிய காவல்துறையினருக்குக் கிடைத்திருப்பதோ 13 வயது சிறுவன்.
விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், தன்னை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்கவே, தான் இவ்வாறு செய்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன், விசாரணைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 4ஆம் தேதி தில்லி சர்வதேச விமான நிலைய அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், விரைவில் புறப்படவிருக்கும் ஏர் கனடா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. சோதனையில் மின்னஞ்சல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இந்த புரளி காரணமாக, 301 பயணிகளும் 16 பணியாளர்களும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, விமானம் தொலைவான இடத்தில் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. பிறகுதான் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am