நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலாவியின் துணை அதிபர் சென்ற ஹெலிகாப்டர் காணவில்லை

மலாவி:

மலாவியின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா உட்பட பத்து பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலாவியின் தலைநகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பின்னர் ஹெலிகாப்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மலாவி அதிபர் உடனடி தேடுதல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தேடுதல் நடவடிக்கைகளை மலாவியின் அண்டை நாடுகளுக்கும், அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, இஸ்ரேலிய அரசுகளுக்கும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகிறது.

அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் முன்னிலை வேட்பாளராகக் கருதப்படும் சிலிமா, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2022இல் கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மலாவி நீதிமன்றம் மறுத்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset