நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசியாவில் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு: ஜோயாலுக்காஸ் வழங்குகிறது

கோலாலம்பூர்:

உலக அளவில் பிரசித்தி பெற்ற ஜோயாலுக்காஸ் கோலாலம்பூரில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜூவல்லரி ஷோரூமின்  மகத்தான திறப்பு விழாவைக் கொண்டாடியது.

இது கோலாலம்பூரில் மிகப் பெரிய தங்க நகை ஷோரூமாக கருதப்படுகிறது.

ஜோயாலுக்காஸ் தங்க மாளிகையின் வெற்றிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்ததுடன் மலேசியாவில் இந்நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதத்திலும் அமைந்தது ஒரு தனிச்சிறப்பாகும்.

இந்த ஷோரூம் ஜோயாலுக்காஸ் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் ஜான் பால் அலுக்காஸ், இயக்குநர் சோனியா அலுக்காஸ் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

மலேசியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தங்க ஆபரண அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் ஈடுபாட்டிற்கு ஒரு சாட்சியாக ஜோயாலுக்காஸ், கோலாலம்பூர் அமைந்துள்ளது என் ஜான் பால் கூறினார்.

தங்க ஆபரண சந்தையில் நாங்கள் எங்களது வெற்றிப் பயணத்தின் 10 ஆண்டுகள் நிறைவினை கொண்டாடும் இத்தருணத்தில் மலேசியாவில் எங்களுக்கு ஏகோபித்த ஆதரவை அளித்த தங்க நகை பிரியர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளும் விதத்தில் அவர்கள் வாங்கும் நகைகள் மீது ஓர் இலவச பரிசை அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இந்த துவக்க விழாவை ஒட்டிய 10ஆவது ஆண்டு விழா சலுகையில் ஒவ்வொரு முறை 4,000 வெள்ளி மதிப்பில் தங்க நகைகளை வாங்கும் போது 0.200 கிராம் தங்க நாணயமும், 5,000 வெள்ளி மதிப்பில் வைர போல்கி மற்றும் முத்து நகைகளை வாங்கும் போது 1 கிராம் தங்க நாணயமும் வெகுமதியாக வழங்கப்படும்.

9 ஜூன் 2024 வரை உள்ள இந்த வியப்பூட்டும் சலுகைகள் ஜோயாலுக்காஸின் அனைத்து ரகங்களிலான நேர்த்தியான ஆபரண தொகுப்புகளிலும் வழங்கப்படும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset