நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சூரி நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது கருடன் திரைப்படம்: மலேசியாவில் 3 DOT MOVIES நிறுவனம் வெளியீடு செய்கிறது 

கோலாலம்பூர்: 

நடிகர் சூரி, சசிக்குமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியானது கருடன் திரைப்படம்.  இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, விடுதலை படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தார். இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கருடன் திரைப்படம் வெளியானது. 

இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக இருந்த துரை செந்தில்குமார் படத்தைச் சிறப்பாக இயக்கியுள்ளார். சூரியை வைத்து சூப்பரான கிராமத்து கதையைப் பக்காவாக கமர்ஷியல் கலந்து ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். 

சசிக்குமார், உன்னி முகுந்தன் மற்றும் சூரி ஆகிய மூன்று பேருக்கு இடையில் நடக்கும் சம்பவம் தான் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.  படத்தின் திருப்புமுனையாக அமையும் அந்த ஒரு சம்பவத்தால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு தடம் மாறுகிறது என்பதைத் தெளிவாக இயக்குநர் காட்டியிருக்கிறார். 

படத்தின் பலமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி அமைந்துள்ளது. கிளைமேக்ஸ் கட்டத்தில் நடிகர் சூரியின் நடிப்பு அசுரனாக அமைந்துள்ளது. கருடன் படத்திற்கான கதாப்பாத்திர தேர்வுகள் சிறப்பாக உள்ளது. இந்த விஷயத்தில் இயக்குநர் துரை செந்தில்குமாரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

கருடன் திரைப்படத்தை மலேசியாவில் 3 DOT MOVIES நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது. முன்னதாக கருடன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி LFS PJ STATE திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளர்கள், உள்ளூர் கலைஞர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு கருடன் திரைப்படத்தை ரசித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset