நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கில்லர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்: படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சென்னை: 

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கி நடிக்கவுள்ளார். 

அந்த படத்திற்குக் கில்லர் என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் படத்தின் பூஜை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. 

10 வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா மீண்டும் இயக்குநர் பாதைக்குத் திரும்பியுள்ளார். 

இந்நிலையில் கில்லர் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றுவார் என்று படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

நியூ (2004), அன்பே ஆருயிரே (2005) திரைப்படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைகிறது. 

OUR ISAI PUYAL READY AND LOADED WITH KILLER TUNES என்ற வாசகத்துடன் மிரட்டலான போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset