
செய்திகள் வணிகம்
ஒப்புதல் செயல்முறைக்கு 72 மணி நேரம் என்பது கப்பல் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு: டத்தோஸ்ரீ ஜெயேந்திரன்
கிள்ளான்:
ஒப்புதல் செயல்முறைக்கு 72 மணி நேரம் என்பது கப்பல் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு.
மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன் இதனை கூறினார்.
காபோடேஜ் கொள்கையின் கீழ் அனைத்து நடைமுறை ஒப்புதல் செயல்முறைக்கும் 72 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொழில்துறைக்கு வெற்றி அல்ல என்று கருதப்படுகிறது. மேலும் இது அனைத்து கப்பல் நிறுவனங்களுக்கும் மோசமான செய்தி.
72 மணி நேரக் காலம், இந்தத் துறையில் பெரும் எதிர்பாராத இழப்புகளைப் பதிவு செய்யும் குறிப்பாக ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
கார்கோ உரிமையாளர்கள் பெரும்பாலும் கடைசி நிமிடத்தில் மாற்றங்களைச் செய்கிறார்கள்.
இந்த கடைசி நிமிடத்தில் மாற்றங்களைச் செய்வதால், 72 மணி நேரம் என்பது மிக நீண்டது.
கப்பல் நிறுவனத்தின் வியாபாரத்தின் தன்மை, கார்கோ உரிமையாளரின் செயல்பாடு ஆகியவற்றை அமைச்சு கருத்தில் கொள்ள வேண்டும்.
இதனால் 72 மணி நேர காலத்தை வெறும் 24 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
24 மணி நேர காலம் என்பது மிகவும் நியாயமானது என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கூறினார்.
முன்பெல்லாம் அது வேறு இப்போது நிலைமை வேறு. இப்போது உயர் தொழில் நுட்பமாகவும் இருக்கிறது. அதிநவீன தொலைபேசிகள், மின்னஞ்சல் உட்பட பல உள்ளன.
முன்பை காட்டிலும் இப்போது கப்பலின் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
ஆகவே ஒப்புதல் செயல்முறைக்கான நேரத்தை குறைக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm