நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பாடகர் சித்தார்த்தனின் ரிதம் & ஸ்வரம் நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி: ஜூன் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது

கோலாலம்பூர்: 

மலேசிய இசை துறையில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பின்னனி பாடகர் சித்தார்தன் அவர்களின் ஏற்பாட்டில் ரிதம் & ஸ்வரம் நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 22ஆம் தேதி மிட்லேண்டஸ் பன்நோக்கு மண்டபத்தில் மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. 

குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும் இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் சித்தார்தனுடன் இணைந்து அவரது இசை வகுப்பில் பயிற்சி பெற்று வரும் இளம் பாடர்களும் தங்களின் திறனை வெளிப்படுத்தவுள்ளனர். 

இந்த இசை நிகழ்ச்சியில் சுக்ரா இசை அகாடெமியைச் சேர்ந்த இளம் பாடகர்கள் தங்களின் படைப்புகளை வழங்கவிருக்கின்றனர் என்று சுக்ராவின் நிறுவனரும் பாடகருமான சித்தார்த்தன் கூறினார். 

இந்த இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை 100 ரிங்கிட் ஆகும். வருகை தரும் மக்களுக்கு உணவு பானங்களும் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த இசை நிகழ்ச்சி வாயிலாக திரட்டப்படும் நிதி தலைநகரில் உள்ள இரு ஆதரவற்ற இல்லங்களுக்கு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டதோடு பாடகர் சித்தார்த்தனும் இசை படைப்பை ஒன்றை வழங்கவிருக்கிறார். 

இந்நிகழ்ச்சியில் மற்ற இசை கலைஞர்களும் கலந்து கொள்ளும் நிலையில் இந்த இசை நிகழ்ச்சியை ஆனந்தா தொகுத்து வழங்கவுள்ளார். 

பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தருமாறு சித்தார்தன் கேட்டுக் கொண்டார்.  இந்நிலையில், இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம், நம்பிக்கை இணைய ஊடகம் அதிகாரப்பூர்வ ஊடகமாக இணைந்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset